நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

Published:

nellai district police office - 2026

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை அன்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பு…

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள் …

திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு  நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைத்தும், மேற்படி அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களுடைய வருங்கால நல்வாழ்க்கையினை மனதில் கொண்டு ஒழுக்கத்துடனும்,

சாதி மோதல்கள் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும், உரிய அனுமதி பெறாத ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சட்டத்திற்கு புறம்பாக எவ்வித செயல்களில் ஈடுபடாமல், அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டரீதியான செயல்களுக்கு இடையூறு செய்யாமலும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிவுரைகளை பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள்  மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எடுத்துக்கூறி  விளைவுகள் குறித்தும் அவ்வப்போது அறிவுறுத்துவதோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் காவல் சரக துணைத் தலைவர் கபில் குமார் சரட்கர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img