அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை

உள்ளூர் செய்திகள் திருச்சி

 

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் உள்ள காவிரி நீர் பாயும் பகுதிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவிரி நீர் வழங்கவேண்டும் என்று அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி ஆலங்குடி அறந்தாங்கி ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் காவிரி நீர் மூலம் விவசாயம செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வருடம் இருமுறை மேட்டுர் அணை நிரம்பினாலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சில நாட்கள் தண்ணீர் வந்து ஏரிகளை தொட்டு பார்த்ததே தவிர குளம் ஏரி கண்மாய் விவசாயத்திற்கு போதுமான அளவு பாதி அளவு கூட நிரம்பவில்லை.முழுக்கொள்ளளவினை எட்டினால் மட்டுமே விவசாயிகள் விவசாயம் செய்யமுடியும் அதனால் தமிழக அரசு புதுக்கோடடை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவிரி கிளை வாய்க்கால்களை சரி செய்து தண்ணீர் வழங்கவேண்டும் என்று அரசிற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ARANTHANGI THEDAKKI EAARY 8 1 - 2026

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.