கோவையில் அதிர்ச்சி! கிரிக்கெட் பேட்டால் கணவரை அடித்தே கொன்ற மனைவி

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

murder - 2026

கோவை: மது போதையில் தொடர்ந்து கணவர் தகராறில் ஈடுபட்டு வந்ததால், ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்து உள்ளார். காவல் துறையினர் கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த ஞானம் என்பவர் தொடர்ந்து மது போதையில் குடும்பத்தினருடன் தகாராரில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கணவரின் சித்ரவதை தாங்காமல், ஆத்திரம் அடைந்த அவரது மனைவி உமாதேவி, கிரிக்கெட் பேட்டால் தனது கணவரை அடித்து கொன்றுள்ளார். பிறகு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, அவர் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் செட்டிபாளையம் காவல் துறையினர் உமாதேவியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞானம் , உமாதேவி தம்பதியினருக்கு 16 வயதில் மாலினி என்ற மகளும், 7 வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.