புது தில்லி: அதிமுக., சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு குறித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனு தொடர்பாக, அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



