‘மோடி ஒரு சாடிஸ்ட்’: கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
karunanidhi statue opening - 2026

பிரதமர் மோடியை வசை பாடுவதற்கான ஒரு களமாக கருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார் திமுக., தலைவர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மோடி ஒரு சாடிஸ்ட் என்று கூறினார்.

மேலும்,  இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தாமே முன்மொழிவதாகக் கூறினார்  திமுக தலைவர் ஸ்டாலின்!

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழி வதற்காகவே, அவரை இந்த நிகழ்ச்சிக்கு திடீர் வரவாக அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது…

லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் கலைஞர். நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அவர். சமூகநீதிக்கு, மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல், பரம்பரை மன்னர் போல தன்னை கருதிக்கொள்கிறார் பிரதமர் மோடி. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக, தன்னையே நீதிமன்றமாக, தன்னையே தேர்தல் ஆணையமாக நினைத்து செயல்படுகிறார் மோடி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பார்வையிட பிரதமர் மோடி வராதது ஏன் ?. ஒரு வார்த்தை கூட இரங்கல் தெரிவிக்க முடியாத அளவிற்கு தமிழகம் என்ன பாவப்பட்ட மாநிலமா ? 

வெளிநாடுகளில் மரணம் நடந்தால் ட்விட் செய்யும் மோடி, தமிழர்கள் மரணமடைந்தால் இரங்கல் தெரிவிக்க மறுப்பது ஏன் ?. அதனால்தான் பாஜகவை வீழ்த்த நினைக்கிறோம். ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க முன்மொழிகிறேன்.

ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக என திமுக., தலைவர் ஸ்டாலின் கூறினார். முன்னர் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கூறியவரின் சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் அந்த இந்திராகாந்தியின் பேரனை தனது தந்தையின் பாணியிலேயே அழைத்துள்ளார் ஸ்டாலின்!

2 thoughts on “‘மோடி ஒரு சாடிஸ்ட்’: கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின்”

  1. கிறுக்கா உங்க அப்பன் செத்தப்போ மோடி வந்தாரே அப்போ உங்க அப்பன் தமிழன் இல்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.