edappadi palanisamy2 - 2026

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் இணைந்திருந்த கள்ளக்குறிச்சியை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதை அடுத்து, கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமானது!

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி விரைவில் அறிவிக்கப்படுவார்

நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்குகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 27 நிறுவனங்களுக்கு நிர்வாக ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்,தமிழகத்திறகு 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். மேலும், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

ஒற்றை சாளர திட்டத்தின் மூலம், நிறுவனங்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.,.. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending