
வேலூர் அருகே விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால். தந்தை மீது தீவைத்து மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடியை அடுத்த கிழிஞ்சூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45), அவரது மகன் அஜித்குமார் (வயது 20).
இவர் தீவிர அஜித் ரசிகர். இன்று வெளியான விஸ்வாசம் படத்தை பார்க்க பணம் தராததால் பாண்டியனை மகன் அஜித்குமார் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாண்டியன் 40% சதவீதம் தீக்காயத்துடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பி ஓடிய அஜித் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்



