மருதமலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் அன்னதானம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
anthanar munnetra kazhagam - 2026

தைப்பூச நன்நாளில் மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ,
அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது

உலக முழுவதும் தைப்பூச திருநாளையொட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திகடனாக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து கோவை மருதமலை கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு விருந்து அளிக்கும் விதத்தில் வடவள்ளி பஸ் நிலையம் அருகில் அன்னதான விழாவாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களான சாதம்,இனிப்பு,மற்றும் தண்ணீர் பாட்டிகள், பழங்கள் போன்றவை வழங்கபட்டது.

இந்த அன்னதான விழாவை கோவை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் மைதிலி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் ஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார், அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் கிளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என ஏரளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.