
கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.. இதற்காக விவேகானந்தா கேந்திர நிர்வாகம் 5.2 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியது.
இதையடுத்து ரூ.22.50 கோடி மதிப்பில் மதிப்பில் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
வேதமந்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.







