ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
assembly - 2026

2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற திட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் மூலம் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர் என்று அரசு கூறியது. இதற்கு திமுக., நேற்று அவையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இது தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தப் படுகிறது என்று திமுக.,வின் பொன்முடி கூறினார்.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் உள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு, பொங்கல் இனாமாக ரூ.1000 அளித்தது. அதற்கு எதிராக, திமுக.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்தான் வழக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.