மேலும் ஒரு அதிமுக., எம்.பி.,யின் கார் விபத்து! கள்ளக்குறிச்சி காமராஜ் காயம்!

Published:

admk car accident - 2026

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் மரணமடைந்த சோகம் மறைவதற்குள்ளாக, மேலும் ஒரு அதிமுக., எம்.பி.யின் கார் விபத்தில் சிக்கியது அதிமுக.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சேலம் அருகே நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ். இவர் வந்த கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த காமராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

அரசு விழாவில் பங்கேற்க கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார் அதிமுக., எம்பி., காமராஜ். அப்போது வாழப்பாடி அருகே அவரது கார் வந்த போது, திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

admk mp - 2026

இந்த விபத்தில் காயமடைந்த அதிமுக எம்.பி.காமராஜ் மற்றும் ஓட்டுநர் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் விபத்தில் சிக்குவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img