ஆகஸ்ட் 24ம் தேதி மதுராவில் நடைபெறும் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க உள்ளார்.
ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 25 வரை ஜன்மாஷ்டமி தினத்தன்று “ஸ்ரீ கிருஷ்ணோத்ஸவ்” என்ற பிரமாண்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களில் உத்தர பிரதேச அமைச்சர்கள் தவிர, மதுரா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஹேமமாலினியும் கலந்து கொள்கிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஊர்வலத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பஜன் பாடகர் அனுப் ஜலோட்டாவும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். ‘டாஹி ஹண்டி’ விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். இதை மும்பையைச் சேர்ந்த ஒரு குழு நிகழ்த்துகிறது.





Super Yogiji! This is why we need leaders who are deeply rooted to the spiritual and cultural ethos of this land! Both Modiji and Yogiji are making Bharatiyas feel proud of their heritage! Support BJP now and always!