பெண்ணின் வயிற்றில்… !அதிர்ந்த மருத்துவரகள் !

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

scan - 2026
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவர் வயிறு வலி காரணமாகவும் வயிற்றுப்போக்கு காரணமாகவும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த பெண்மணி வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

60 வயது பெண்ணின் வயிறு மற்றும் பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும் இதனை உறுதி செய்வதற்காக லேப்ராஸ்கோப் மற்றும் சிறிய ரக கேமிரா ஒன்றினை அந்த பெண்ணின் வயிற்றில் உள்ளே செலுத்தி சோதனை செய்தனர்.
stone - 2026
சோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்து, அறுவை சிகிச்சை மூலம் சுமார் 40 நிமிடங்கள் போராடி அந்த பெண்ணின் வயிறு மற்றும் பித்தப்பையில் இருந்து சுமார் 1898 கற்களை வெளியே எடுத்தனர். இத்தனை கற்கள் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.