reserve bank of india rbi - 2026

2027 ஜன.1 முதல் புதிய காசோலைகளா? ரிசர்வ் வங்கி விளக்கம்!

வணிகம் இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
reserve bank of india rbi - 2026
#image_title

2027ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்று சமூகத் தளங்களில் பரப்பப்பட்டது வெறும் வதந்திதான் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவலில், தற்போது பயன்பாட்டில் உள்ள வழக்கமான CTS காசோலைப் புத்தகங்கள் டிசம்பர் 31, 2026 முதல் மாற்றப்படும் என்றும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தரங்களைக் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்கள் ஜனவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், காசோலை எண்கள் எழுத்து-எண் கலந்த குறியீடாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், MICR எண் மாற்றப்படும் என்றும், மேம்பட்ட UV ஒளி குறியீடுடன், புதிய காசோலைப் புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு தாளும் (காசோலைப் பக்கம்) இந்திய ரிசர்வ் வங்கியின் அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜனவரி 1, 2027 முதல் பழைய CTS காசோலைகள் ₹50,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், எனவே உங்களிடம் தற்போதுள்ள காசோலைப் புத்தகங்களை உங்கள் வங்கியில் ஒப்படைத்துவிட்டு, புதியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு சமூகத் தளங்களில் பரவலாக ஒரு தகவல் சுற்றிச் சுற்றி வந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

புதிய காசோலை புத்தகங்கள் அமல்படுத்தப்படும் என்றும், இவற்றில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்ததால், ஏராளமான பொதுமக்கள் குழம்பிப் போய், வங்கிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் தற்போதைய காசோலை செல்லாது என்று பலரும் தொடர்ந்து பதிவிட்டதால், வங்கி வாடிக்கையாளர்கள் தரப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அதை தெளிவுப்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் எக்ஸ் தள பதிவில்,

தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலை புத்தகங்கள் 2026ம் ஆண்டு டிச.31ம் தேதிக்கு பினன்ர் மாற்றப்பட உள்ளதாகவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன காசோலை புத்தகம் 2027ம் ஆண்டு ஜன.1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. தற்போதுள்ள சூழலில் காசோலை புத்தகங்களில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். சமூக வலை தளங்களில் வரும் செய்தி தவறு, மக்களை திசைதிருப்பக்கூடியது. இத்தகைய விவகாரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்பபோது அறிவிப்புகளை வெளியிடும். அதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். – என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  நிறுவன தீபாவளி!