கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!

Published:

pon radhakrishnan - 2026

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி திட்டம் துவக்க விழா காலை 9 மணிக்கு கொல்லன் விலை தக்கலை பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் உள்ள பாஞ்சஜன்யம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது

இதில் ரூபாய் 5.59 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி மூலம் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட உள்ளது

நரேந்திர மோடி அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நாளை காலை 10 மணி அளவில் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் வைத்து பொன்ராதாகிருஷ்ணன் பொற்கரங்களால் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட உள்ளது

கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்க விழா நாளை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் வைத்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து கப்பல்துறை கங்கா புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் காணொளிக் காட்சி மூலம் துவக்கப்பட உள்ளது

இந்நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துறைமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img