பாலாகோட்டில் தாக்குதல் நடத்தும் முன்… 300 ஆக்டிவ் மொபைல் போன் சிக்னல் அங்கே இருந்தன!

Published:

pakistan terror funding3 - 2026

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அங்கே பலர் இருந்ததை என் டி ஆர் ஓ உறுதி செய்திருக்கிறது

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின

அந்த நேரத்தில் அங்கு 300 மொபைல் போன்கள் உயிர்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.  திங்கள் கிழமை இன்று தகவல் வெளியிட்ட என் டி ஆர் ஓ – நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் தெரிவித்தபோது இந்திய விமானப்படை விமானங்கள் அந்த முகாமை தாக்குவதற்கு முன்னதாக அங்கே நபர்கள் இருந்ததை உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ளது, பிப்ரவரி 26ஆம் தேதி 12 மிராஜ் 2000 வகை ஜெட் விமானங்கள் மூலம் அங்கே குண்டுகள் வீசப்பட்டன

ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் அந்த முகாம்கள் மீது வீசப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்த தாக்குதலில் தொழில்நுட்பரீதியான விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி 300 மொபைல் போன்கள் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவாக இருந்தது, தாக்குதல் தொடுக்க படுவதற்கு முன்னர் வரை கூட!

மேலும் தொலைபேசி சிக்னல்கள்க்கான கருவியும் அங்கே இருந்துள்ளது அது இந்திய விமானப்படை விமானங்களின் தாக்குதலில் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்து குறிப்பான தகவல்கள் இல்லை எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் தெளிவாக தெரியவருகிறது!

இன்று கோயமுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தலைவர் பி எஸ்  தனோவா கூறியபோது, முகாமை அழிப்பது மட்டும் தான் இந்திய விமானப்படையின் பணியே தவிர எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது! அதை அரசு விரைவில் வெளிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img