டேனியல் காந்தி, செபஸ்டியன் சீமான் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு!

Published:

11 kaththi seeman - 2026

இந்திய ராணுவத்தையும் மத்திய அரசையும் பற்றி அவதூறு பரப்பிவரும் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சியின் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களையும் மத்திய அரசையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் பொது மேடைகளில் பேசுவதும் வழக்கமாக கொண்ட திருமுருகன் காந்தி என்கின்ற டேனியல் காந்தி மற்றும் சீமான் என்கின்ற செபாஸ்டின் சைமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பேசி வருவது வளர்ந்து வரும் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போன்று இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் திரு. A.K.விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஊடகவியாளர் நலச்சங்க அலுவலக செயலாளர் கிருஷ்ணவேணி ஜெயராமன் திருமுருகன்காந்ததி என்கிற டேனியல் காந்தி என்பவர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் என்பது ஒரு தேர்தல் நாடகம் என்றும் அரசியல் லாபத்திற்காக நடத்தப் பட்டது என்றும் மிக கேவலமாக பேசி வருகிறார்! இவரின் இந்தப் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் கேள்விக்குறியாக இருக்கிறது.

சீமான் என்கின்ற செபாஸ்டின் சைமன் கடந்த 26-2-2019 அன்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை மிகவும் கேவலமான விமர்சனங்களை ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்!  மேலும் அவர் பாகிஸ்தான் மீது நடத்திய விமான தாக்குதல் ஒரு கோழைத்தனமானது என்றும் இதுவே சீனாவுடன் இந்தியா போர் தொடுக்குமா என்றும் கேலி கிண்டலாக இந்திய இராணுவத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

மேற்கண்ட நபர்கள் அனைவரும் இந்தியாவை துண்டாடும் நோக்கத்துடணும் இந்தியா பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக பேசி வருகின்றனர். அதனால் அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதனை  தேசிய ஊடகவியாளர் நலச்சங்க அலுவலக செயலாளர் கிருஷ்ணவேணி ஜெயராமன் தெரிவித்தார்.

செய்தி:- சுரேந்தர்

Related articles

Recent articles

spot_img