நான் குற்றப் பரம்பரை என்று குறிப்பிட்டது திமுக., ஊழல் குடும்பத்தையே! தமிழிசை விளக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக.,வினர் தன் மீது சுமத்திய அவதூறுகளை எதிர்கொள்ள, நான் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்; குற்ற பரம்பரையைச் சேர்ந்தவர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகப் பரவியது.

வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

இருவரது வேட்பு மனுக்களிலும் படிவங்கள் சரியாக நிரப்பப் படாமை, சில விவரங்கள் குறிப்பிடப் படாமை ஆகியவற்றால் குழப்பம் நிலவியது. தமிழிசையின் மனு மீது கேள்விகளை எழுப்பிய திமுக., வழக்கறிஞர்கள், அவர் மீது அவதூறுகளை பரப்பத் தொடங்கினர்!

அப்போது, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டர் பதிவில், நான் குற்ற பரம்பரையைச் சார்ந்தவர் இல்லை, கற்ற பரம்பரை! என்று குறிப்பிட்டிருந்தார்!

ஆனால், இந்த குற்ற பரம்பரை என்ற வார்த்தையை திமுக.,வினர் மேலும் அவதூறு கிளப்பும் வகையில், சாதி ரீதியாக பிளவினை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளைப் பரப்பத் தொடங்கினர். குற்றப் பரம்பரை என்ற சொல்லை வைத்து ஒரு தரப்பு மக்களை இழிவுபடுத்துவதாக கருத்துகளைப் பரப்பினர். அதனை திமுக.,வின் ஊடகங்கள் எடுத்துக் கொண்டு, விவாதம் நடத்தும் அளவுக்குச் சென்றது.

இது குறித்து விவரம் அறிந்ததும், தான் குற்ற பரம்பரை என்று குறிப்பிட்டது சாதி ரீதியான சமுதாயத்தை அல்ல… திமுக.,வினரையே! என்று விளக்கம் அளித்துள்ளார்.

நான் திமுகவையே குற்றப் பரம்பரை எனக் கூறி இருந்தேன்! தேசியத்தையும் தெய்வீகத்தையும் பெரிதாகப் போற்றும் நான் எவ்வாறு அந்த சமுதாயம் குறித்து தவறாக பேசுவேன் என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவினர் என் மீதும் என் கணவர் மீதும் புழுதி வாரித் தூற்றும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் திமுகவினரின் இந்தச் செயலை நான் கண்டிக்கிறேன் என்று டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.