December 5, 2025, 11:48 PM
26.6 C
Chennai

அடிபட்ட பத்திரிகையாளருக்கு உதவிய ராகுலின் ‘ஆபத்பாந்தவ’ நாடகம்! சாயம் வெளுத்ததால் சிரிக்குது உலகு!

rahuldrama - 2025

பத்திரிகையாளர் ஒருவர் விபத்தில் மயங்கி விழுவது போலவும், அப்போது ராகுல் காந்தி அங்கே வந்து அவரை காப்பாற்றி தனது கர்சீப்பால் அவரது வியர்வையை துடைத்து உதவுவது போலவும் சினிமா பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் காந்தி மிகவும் நல்லவர் மற்றும் எளியவர் என்ற தோற்றத்தை இதன் மூலம் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் இந்த நாடகத்தை உடன் இருந்து படம்பிடித்த நபர் அம்பலப் படுத்தியிருக்கிறார்.

பத்திரிகையாளர் ஒருவர் புதன்கிழமை நேற்று மதியத்திற்கு மேல் தில்லியில் ஒரு விபத்தில் சிக்கிய தாகவும் அப்போது அந்த வழியாக வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஒரு வீடியோ பதிவு காங்கிரசால் வெளியிடப்பட்டிருக்கிறது! இந்த வீடியோவை விபத்தில் சிக்கிய அந்த பத்திரிகையாளரும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ராஜேந்திர வியாஸ் என்பவர், ராஜஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் உரிமையாளர். இவர் புதன்கிழமை மதியம் தில்லி ஹுமாயுன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அந்த நேரம் அவரை கடந்து சென்றது ராகுல் காந்தியின் கார்.

இந்த விபத்தை கவனித்து விட்ட ராகுல் காந்தி உடனடியாக தனது காரை நிறுத்தி விபத்தில் சிக்கிய மனிதரை காருக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்!

 

இது குறித்த வீடியோ பதிவு ஒன்று காங்கிரசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது! இந்த நிகழ்வை  உடன் வந்த ராஜேந்திர வியாசின் அலுவலக பணியாளர் வீடியோ பதிவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது அலுவலகத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகக் கூறுவது போல், அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது!

காருக்குள் அமர்ந்து இருக்கும் ராஜேந்திர வியாஸின் நெற்றியில் வழியும் வியர்வையை கர்சீப்பால் துடைத்து விட்ட ராகுல் காந்தியிடம் மீண்டும் ஒருமுறை துடைத்து விடுங்கள் என்கிறார் வியாஸ். அதையும் அவரது அலுவலக பணியாளர் வீடியோவாக எடுத்து உள்ளார்!

அந்த வீடியோவில் சார் மீண்டும் உங்கள் கர்சீப்பால் என் நெற்றியில் துடைத்து விடுங்கள் இந்த வீடியோவை நான் டிவி சேனலுக்காக பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார். உடனே பயங்கரமாக சிரித்துக்  கொண்ட ராகுல், அவர் கூறியவாறே செய்கிறார். இதையும் அந்தப் பணியாளர் படம் பிடித்துக் கொள்கிறார்

இந்த வீடியோ சம்பவத்தை குறிப்பிட்டு, 48 வயதாகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது போன்று மிகவும் உதவிகரமாக தனது கௌரவத்தை கூட பார்க்காமல் செயல்படுபவர் என்று சோசியல் மீடியாக்களில் செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன!

இதனை மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்! ராகுல் காந்தியை போன்று ஒரு மனிதநேயமிக்க மனிதர் உலகத்தில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ராகுல் காந்தியின் வாழ்க்கையில் நடந்துள்ளன என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

இது போன்று ஏற்கனவே புவனேஸ்வர் விமான நிலையத்தில் ஒரு பத்திரிகையாளர் கால் இடறி விழுந்த போது ராகுல் ஓடிப்போய் காப்பாற்றினார் என்பதையும் சிலர்  தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்!

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய பாதுகாப்பு தொடர்பில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்! செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் வல்லமை மிக்க ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது என்ற அறிவிப்பை அவர் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் முன்னமேயே குறிப்பிட்டு நாட்டு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பின்னர் இதுகுறித்து அறிவித்தார்

இந்த அறிவிப்பை கேட்ட ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி மிகச்சிறந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் இது நல்ல நாடகம் என்று குறிப்பிட்டிருந்தார்! ஆனால் ராகுல் தான் ஒரு நாடகத்தை  இவ்வாறு அரங்கேற்றி விட்டு மோடியை நாடக தினம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

தனது நாடகத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக மோடியை நாடக நடிகர் என்று குறிப்பிட்டார் ராகுல் என்கிறார்கள்!

அதேபோல் நேற்று உடுப்பி சென்றிருந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பக்தர் ஒருவர் வெகு நேரம் கண்ணை மூடி சன்னதி முன் தியானத்தில் இருந்தார் அந்த நேரம் அவருக்காக காத்திருந்து அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பே நிர்மலா சீதாராமன் உடன் வந்தவர்கள் உடன் சென்று வணங்கினார்

இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது! இந்த வீடியோ பரவியது அனைவரும் நிர்மலா சீதாராமன் எளிமையை கண்டு பாராட்டினார்கள்

இப்போது இது ராகுலின் முறை! ஆனால் ராகுல் இதை இயல்பாக செய்யாமல் ஏற்கனவே திட்டமிட்டு செய்தது போல் இந்த வீடியோவில் காட்சிகளும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது நாட்டில் பலருக்கும் அருவருப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories