தமிழகத்தில் 932 மனுக்கள் ஏற்பு: தேர்தல் ஆணையம்

Published:

satyabrata sahoo - 2026

மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது  என்று கூறினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.

1587 வேட்பு மனுவில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும், 932 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் சத்யபிரத சாஹூ.

மேலும், 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, இதில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சத்யபிரத சாஹூ திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றார்.

அமமுக-வுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும், தமிழகத்தில் இதுவரை ரூ 50.70 கோடி பணம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார் சத்ய ப்ரதா சாஹு.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img