யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். மோடிதான் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பதில் 130 கோடி மக்களும் தெளிவாக உள்ளனர்! காங்கிரஸ் அறிவித்துள்ள, ஏழைகளுக்கான மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் மிகப்பெரும் கேலிக்கூத்து என்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், உத்தராகண்ட் ருத்ரபூர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு ஆகிய இடங்களில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது…
Addressing a massive rally in Meerut. Watch. https://t.co/pQajSHmqpX
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 28, 2019
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இந்தியர்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டனர் என்பதையே, திரண்டிருக்கும் கூட்டம் காட்டுகிறது. புதிய இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களுக்கும் கொள்கை உறுதியற்றவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது!
காங்கிரஸ் அறிவித்துள்ள மாதம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது!. ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகளை நாம் தொடங்கியபோது அதைக் கேலி பேசியவர்கள், இன்று அதே கணக்கில் பணம் செலுத்தப் போவதாகக் கூறுகின்றனர்.
2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்த இந்தியாவையும், அதன் பிறகு உள்ள இந்தியாவையும் ஒப்பிட்டு வாக்களியுங்கள்.
வாரிசு அரசியலை முதன்மைப் படுத்தும்… ஊழல் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா பின்னடைவை சந்திக்கும்!
அவர்கள், எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாமை தாக்கியது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், பாகிஸ்தானில் யார் ஹீரோ ஆவது என எதிர்க்கட்சிகள் போட்டி போடுகின்றன.
உங்களுக்கு இந்தியாவின் ஹீரோக்கள் வேண்டுமா, பாகிஸ்தானின் ஹீரோக்கள் வேண்டுமா?
செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் அரசு அதைத் தள்ளிப்போட்டது. 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு இந்த முடிவு நீண்ட காலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டியது! ஆனால் முடிவு எடுக்கப்படாமல் காங்கிரஸ் அரசால் தாமதப்படுத்தப்பட்டது என்று பேசினார் பிரதமர் மோடி
Grateful to the people of Jammu for the affection. Speaking at a rally. Watch. https://t.co/syGJ4rGDbL
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 28, 2019
வாரிச௠அரசியலை à®®à¯à®¤à®©à¯à®®à¯ˆà®ªà¯ படà¯à®¤à¯à®¤à¯à®®à¯ ஊழலின௠ஊறà¯à®±à¯à®•à¯à®•ண௠UPA கூடà¯à®Ÿà®£à®¿ மீணà¯à®Ÿà¯à®®à¯ ஆடà¯à®šà®¿à®•à¯à®•௠வநà¯à®¤à®¾à®²à¯, இநà¯à®¤à®¿à®¯à®¾ பினà¯à®©à®Ÿà¯ˆà®µà¯ˆ சநà¯à®¤à®¿à®•à¯à®•à¯à®®à¯ !