தேர்தல் பிரசாரம்! உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!

Published:

udayanidhi rasa - 2026

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143, 341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img