கூட்டம் இல்லை… நேராக சென்னைக்கே வண்டியை விட்ட கமல்..!

Published:

Kamal - 2026

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

பின்னர் படப்பை வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடம் வந்தார். ஒரகடத்திலும் மக்கள் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் நிர்வாகிகள் மட்டும் ஒருசிலர் நின்றிருந்தனர். அங்கும் பொதுமக்கள் கூட்டம் அறவே இல்லை.. இதனால் நேரத்தை வீணாக்காமல் சென்னைக்கே செல்கின்றேன் என்று கூறிவிட்டு, இங்கும் பிரசாரம் செய்யாமல் சென்னைக்கே புறப்பட்டுச் சென்றார்.

Related articles

Recent articles

spot_img