திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரவேல் விபத்தில் உயிரிழப்பு! அமமுக.,வினர் சோகம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

thirupathur ex mla - 2026

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ., சுந்தரவேல் விபத்தில் உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக இன்று காலை 5 மணி அளவில் தனது காரில் திருப்பத்தூரில் இருந்து சென்னை சென்றுள்ளனர் விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு இவர் காரில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விண்ணமங்கலத்தில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி லாரியின் அடியில் சிக்கியது.

இந்த விபத்தில்சுந்தரவேல், அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

- 2026
திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி புகைப்படம்

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுந்தரவேல் தற்போது அமமுகவின் திருப்பத்தூர் நகர செயலாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த சம்பவம் அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.