பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரக் கொலை! உறவினர் கைது!

Published:

kovai pragati body 1 - 2026

கோவை: பூசாரிபட்டி அருகே பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் உள்ள முட்புதரில் கல்லூரி மாணவி பிரகதி(20) உடல் காயங்களுடன் மீட்பு! கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த மாணவியை காணவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாணவி கொலையானது கண்டறியப்பட்டது!

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தனக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில் உறவுப் பெண்ணான அந்த் மாணவியை அவன் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கல்லூரி ஒன்றில் கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஊரைச் சேர்ந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி படிந்து வந்தார்.

தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை என்பதால் விடுமுறையை கழிக்க, வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறி விடுதியில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு அவர் செல்லவில்லை.

மேலும், செல்போனில் தன் பெற்றோரிடம் வீட்டுக்கு வருகிறேன் என்றுதகவல் தெரிவித்த நிலையில், மகள் வராததால் தவித்த அவர்கள் கல்லூரி விடுதியில் விசாரித்துள்ளனர். ஆனால் அப் பெண் விடுதியில் இருந்து கிளம்பிச் சென்று வெகு நேரமானது தெரியவந்தது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதையடுத்து கோவை வந்த பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனதாக, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து போலீஸாரும் மாணவியைத் தேடினர்.

இந்நிலையில் பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி அருகே சாலையோர முட்புதரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கழுத்தறுபட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சடலத்தை வாகனத்தில் ஏற்றியபோது, அந்த வழியாக கேரளாவுக்கு சென்ற ஒரு பெண் அந்த சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இந்தப் பெண் தனக்கு நன்கு தெரிந்த பக்கத்து வீட்டு கல்லூரி மாணவி என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கே விரைந்து வந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட மாணவிக்கு தான் விரும்பிய நபருடன் ஜூன் 13ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்காக பெற்றோர் உறவினர் வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா DIG கார்த்திகேயன் Sp சுதீஸ்குமார் சிங் மாணவியின் உடல் கண்டெக்கப்பட்ட பூசாரிபட்டியில் நேரில் ஆய்வு செய்தனர் கொலையாளிகளை பிடிக்க ADSP மாடசாமி , பொள்ளாச்சி DSP சிவக்குமார், போத்தனூர் DSP பாலமுருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடினர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பொள்ளாச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாணவியிடம் இறுதியாக செல்போனில் பேசிய நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், மாணவி உடல் கிடந்த இடத்திற்கு அருகே 20 அடி தொலைவில் மாணவி பயன்படுத்திய செல்போன் மீட்கப்பட்டது. அந்த செல்போனை ஆய்வு செய்தனர். மேலும், ஆவாரம்பாளையத்தில் மாணவியை மர்மநபர் பின் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டன.

இதை அடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கப்பட்ட நபர்தான் அது என்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் சதீஷ் குமார் என்ற அந்த நபரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை செய்தனர். அவன் மாணவியின் உறவினர் என்றும், ஏற்கெனவே திருமணமானவன் என்றும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் மாணவியை பெண் கேட்டுச் சென்றபோது, திருமணம் செய்து கொடுக்க மறுத்தனராம். இந்நிலையில் தான் விரும்பிய பெண்ணுக்கு திருமணம் என்ற தகவல் அறிந்து ஆத்திரமுற்ற அவன், மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

ஆத்திரம் தாங்காமல், மாணவியின் மணிக்கட்டு, கை விரல்களை உடைத்துள்ள தாகவும், கழுத்து, தோள்பட்டை, மார்பு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியுள்ள தாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சதீஷ்குமாரை கோமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.  இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் மகள் எப்போது வருவாள் என்று காத்திருந்த பெற்றோம், சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கொண்டு சென்றபோது கதறியழுத காட்சியைக் கண்டவர்கள் மனம் கலங்கினர்.

Related articles

Recent articles

spot_img