தமிழகத்தில் பத்து மையங்களில் மறு வாக்குப் பதிவு: சத்யபிரத சாஹு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

election commissioner satyaprada sahu - 2026

தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ததாகக் கூறி, வேலூர் நீங்கலாக தமிழகத்திலுள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவும் கடந்த 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் கூறப் பட்டது. இதுதொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பத்து வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்துள்ளார்.

அவர் தனது பரிந்துரையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குப் பதிவு மையங்கள், பூந்தமல்லியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையம் மற்றும் கடலூரில் ஒரு மையம் என மொத்தம் பத்து வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெற பரிந்துரைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.