செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழா முளைப்பாாி ஊா்வலம்

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் நெல்லை

sengotti kovil - 2026செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாாிஊா்வலம் நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம்  செங்கோட்டையில் மிகவும் பழமைவாய்ந்த நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்தோறும் சித்திரை மாதம் கொடைவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இந்த கொடைவிழா கடந்த 01.05.2019அன்று திருக்கால் நாட்டுடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபஆராதனை நடைபெற்றது.

சிறப்பு நிகழ்ச்சியாக இன்று 07ஆம் தேதியில் மாலை 5மணிக்கு ஏராளமான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊாவலம் கோவில் முன்பிலிருந்து மேளதாளத்தடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபஆராதனை நடத்தப்பட்டு இரவு 8மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.