கோவைில் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு தடை கோரி பெண் புகார்..!

kamalhasan speech - 2026கோவைில் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு தடை கோரி பெண் புகார்..!

சூலூரில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதியுங்கள்… பெண் புகார் மனு

கோவை மாவட்டம் : சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை கோரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டரின் மனைவி ஒருவர், அளித்துள்ள புகாரால் மனுவால் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் பனப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலமுருகன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார் இவர் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பல்லடத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தல் அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான பாலமுருகனின் மனைவி விஜயகுமாரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரைக்கு சென்ற எனது கணவர் மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது இறப்பு குறித்து எந்தவித தகவலும் இல்லை எனது கணவரின் இறப்பு குறித்து இதுவரையில் கட்சியினரோ, கட்சி தலைவரான கமலஹாசனோ சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் கட்சி பணியில்ஈடுபட்டிருந்த பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories