அய்யய்யோ… தமிழிசை பேசுவது பச்சைப் பொய்! அலறுகிறார் மு.க.ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin - 2026

பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தர்ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரசேகர ராவ் மட்டுமல்ல, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு என்று மட்டுமல்ல, மோடியுடனும் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதற்கு பதிலளித்துள்ள திமுக., தலைவர் ஸ்டாலின், இன்று வெளியிட்ட அறிக்கையில்,

காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தது திமுக.,தான்! பச்சைப்பொய் நிறைந்த பேட்டியை அளித்த தமிழிசை சவுந்தரரானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! தோல்வியின் விளிம்புக்குச் சென்றுள்ள பாஜக.,வுக்கு இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது கைதேர்ந்த கலை!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்ற திருமதி தமிழிசையின் “பச்சைப் பொய்”க்கு என் பதில் இதோ!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக் காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்!

பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் பொய் பேட்டி அளித்திருப்பதற்காக வருத்தப்படுகிறேன் என்று அறிக்கையில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.