ஜெ. நினைவிடம் கட்ட எதிர்த்தவர்களுடன் கூட்டு சேர்ந்த செந்தில்பாலாஜி மனசாட்சியை தொலைத்தவர்: சரத்குமார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

sarathkumar - 2026

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனசாட்சி எப்படி இருக்கிறது என்று அவருக்கு தான் தெரியவேண்டும்! ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார் செந்தில் பாலாஜி என்று கரூரில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது குற்றம் சாட்டினார்.

கரூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாகக் கூறிய அவர், தற்போது எதிர்க்கட்சி வேட்பாளராக இருக்கும் திமுக., வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே, அ.தி.மு.க வில் இருந்தும், அமைச்சராக இருந்தும் சென்றவர்,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, சிறந்த முறையில் அந்த இயக்கத்தில் மரியாதை கொடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட வைத்த அந்த இயக்கத்தினை தூக்கிப் போட்டு விட்டு, தற்போது, ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கே எதிர்ப்பு தெரிவித்த கட்சியிடம் சேர்ந்துள்ளது, அவரது மனசாட்சி, எப்படி உள்ளது என்பதை அவருக்குக் காட்டும்!.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நடிகர் கமல் கூறியுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள்… பயங்கரவாதத்திற்கும், தீவிரவாததிற்கும் வித்யாசம் தெரியாமல் நடிகர் கமல் பேசியுள்ளார். அதுபற்றி விரிவாகக் கூறுவதற்கு இது சரியான நேரம் அல்ல!

பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர்! அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்றார் சரத் குமார்.

பேட்டியின் போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கரூர் மாவட்ட பொருப்பாளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.