நடிகர்கள் வருகையால் களைகட்டும் இடைத் தேர்தல்!

Published:

vintheya - 2026

தேர்தல் என்றாலே திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கிராமங்களில் அணி வகுப்பார்கள். பிரசாரத்துக்கு வரிந்து கட்டுவார்கள்.

இப்போது நான்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்து கோடி, பத்து கோடி ஒவ்வொரு நடிகர்களுக்கும் செலவாகும் என்று ஆரம்பத்தில் கட்சிகள் வேகம் காட்டவில்லை.
பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சில கோடிகளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.

நடிகை விந்தியா, நடிகர் ரஞ்சித், நடிகர் மனோபாலா, நடிகர் சரத்குமார், நடிகர் குண்டு கல்யாணம், நடிகர் கார்த்திக், நடிகர் வையாபுரி, நடிகர் சிங்கமுத்து, நடிகர் செந்தில், நடிகை கோவை சரளா என … பலரும் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக சார்பில் சிக்கன நடவடிக்கையாக கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.வான நடிகர் வாகை சந்திரசேகர் இருவரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

திரையில் பார்த்த நடிகர்களை நேரில் பார்க்க ரசிகர்களும், வாக்காளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் காண முடியாத நடிகர் நடிகைகளை இடைத்தேர்தல் களத்தில் காண முடிந்ததாகக் கூறுகிறார்கள்!

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img