கஜா புயலில் வீடிழந்த பாட்டிக்கு சூப்பர் வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

Published:

ragava lawrance newhouse horz - 2026

கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

நடிகர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என்று சினிமாத் துறையில் பல்வேறு அவதாரங்களை எடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ், இல்லாதோர்க்கு உதவும் குணம் கொண்டவர் என்பது திரை உலகத்தினருக்கு மட்டுமன்றி பொதுவெளியிலும் பலருக்குத் தெரியும். இரக்க குணத்திற்கு சொந்தக்காரரான ராகவா லாரன்ஸின் இன்னொரு செயல் இப்போது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

கஜா புயலின்போது வீட்டை இழந்து பாட்டி ஒருவர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதிகம் பேரை சென்றடைந்து வைரலான இந்த வீடியோ, ராகவா லாரன்ஸ் கண்ணிலும் பட்டது. உடனே அவர் ஒரு முடிவு எடுத்தார். அந்தப் பாட்டிக்கு முதலில் வீடு கட்டிக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, வீடு கட்டி முடித்து, அந்தப் பாட்டியிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். அம்மாக்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி என்று இதனைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பாட்டியுடன் புது வீட்டில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் இதனைத் தன் கவனத்துக்குக் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த டிவிட்டர் பதிவைக் கண்ட டிவிட்டர்வாசிகள், ராகவா லாரன்ஸுக்கு சபாஷ் போட்டு பாராட்டி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img