என்ன சொல்கின்றன… தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்?!

Published:

laughing modi - 2026

பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சி மீண்டும் அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் மற்ற நிறுவனங்களும் தங்கள் எக்சிட் போல் முடிவுகளை தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்டத் தேர்தலில், கடைசிக் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இதை அடுத்து, எக்ஸிட் போல் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.

இந்நிலையில், எக்ஸிட் போல் – கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு:

டைம்ஸ் நவ்: பாஜக கூட்டணி: 306. காங். கூட்டணி:128. மற்றவை:127

ரிபப்ளிக் டிவி: பாஜக: 287. காங்: 128 மற்றவை:127.

நியூஸ்X: பாஜக: 298 காங்: 118  மற்றவை:126

நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்து கணிப்பிலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதன்படி,  பாஜக- 292 முதல் 312; காங்கிரஸ்- 62 முதல் 72′; இதர கட்சிகள் 102 முதல் 112.

ஜி நியூஸ் சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமாம். பாஜக அணி 305; காங்கிரஸ் அணி 124; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 26.

இந்தியா டுடே கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 0-4; திமுக அணி- 34-38

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக 29 இடங்களைக் கைப்பற்றும். அதிமுக கூட்டணி- 9; திமுக அணி- 29

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திமுக 22 முதல் 24 இடங்களைக் கைப்பற்றும்.

புதிய தலைமுறை எக்ஸிட் போல்படி, திமுக கூட்டணிக்கு 34 சீட் கிடைக்கும்! என்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img