பரிதாபம்…மின்சார வயர் அறுந்து விழுந்து 11 ஆடுகள் பலி!

Published:

rain and light - 2026

கோவில்பட்டி அருகே மின்சார வயர் அறுந்து விழுந்து 11 ஆடுகள் உயிரிழந்தன.

கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் குளத்தூள்வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் அய்யலுசாமி(55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இன்று வழக்கம் போல ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, திடீரென பலத்த மழை பெய்ததால், தனது ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் நிலம் அருகே வந்தபோது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும் வயர் திடீரென அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 11ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Related articles

Recent articles

spot_img