மர்ம விலங்கு கடித்துக் குதறிய ஆடுகள்!

உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்

goat died - 2026

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பலவ திம்மன பள்ளி என்னும் கிராமத்தில் மல்லப்பா என்பவரது பதினைந்திற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் குதறியது மர்ம விலங்கு.

நேற்றிரவு சூளகிரி சுற்றுப் பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் இப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. இரவு ஒன்னரை மணி அளவில் மல்லப்பா என்பவரது வீட்டின் சுவற்றின் மீது ஏறி மர்ம விலங்கு 15க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்தது சத்தம் கேட்ட மல்லப்பா அலறி அடித்துக் கொண்டு கூச்சல் போட்டதால் விலங்கு தப்பி ஓடியது.

கிராமத்தைச் சுற்றிலும் காட்டுப்பகுதி என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் வருவது குறிப்பிடத்தக்கது தகவலறிந்த வனதுறை
விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறது 15 ஆடுகள் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதே போன்று பல ஆண்டுகளுக்கு முன்பு சூளகிரி அருகே பேடப்பள்ளி என்னுமிடத்தில் 15 ஆடுகளையும் அதேபோன்று பேரண்டப்பள்ளி வன பகுதிக்கு அருகில் இருக்கும் கோபசந்திரம் என்ற இடத்தில் 10 ஆண்டுகளை தாக்கியதும் குறிப்பிடத்தக்கது

இதேபோல ஓசூர் அருகே அம்பலட்டி கிராமங்களில் ஏற்கனவே தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.