ஜாதி மதம் மொழி இன ரீதியாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்து வரும் திரைப்பட இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் மீது புகார் மனு போலீசில் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை திருநின்றவூரை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக உள்ளார்!
அவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்
தொடர்ந்து ஜாதி மதம் இனம் மொழி பண்பாடு மற்றும் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார். சுய விளம்பரம் தேடுவதற்காக மன்னர் ராஜராஜனின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பித்து வருகிறார்
அவரது பேச்சு தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் ஜாதி மதம் இனம் மொழி அடிப்படையில் இழிவுபடுத்தி பேசி மோதலை உருவாக்க முயற்சிக்கும் ரஞ்சித்தின் செயல் கண்டிக்கத்தக்கது
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்




