சிக்னலை மீறி ஓட்டிச் சென்றால் ஓட்டுனர் உரிமம் ரத்தாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் போலீசார்!
சிக்னலை மீறி ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்!
குரோம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுடன், அதற்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது! இதில் போக்குவரத்து உதவியாளர் மணிமாறன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் !
அப்போது யாரும் கண்காணிக்கவில்லை; யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் சிக்னலை மீறிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப் பட்டது.
மேலும் ஒவ்வொருவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது!



