தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!

Published:

viruthunagar admk - 2026அதிமுகவில் அமமுக நிர்வாகிகள் பெருமளவில் மீண்டும் கலந்து வருவதும் இணைந்து வருவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் நேற்று இணைந்தனர்! தேர்தல் தோல்விக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மாவட்டந்தோறும் அங்கிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர்!

நேற்று மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் இளங்கோவன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகாசி ஒன்றியச் செயலர் சுப்பிரமணிய சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலர் மாணிக்கம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அமல்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலர் நல்லதம்பி மாணவரணிச் செயலர் முனிஷ் பொறியாளர் அணி செயலர் செந்தூர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஈபிஎஸ் சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமமுக., டிடிவி தினகரன் ஆகியோரின் வலதுகரமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார். இது அமமுக.,வில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தலில் அமமுக., பெரும் தோல்வியைச் சந்தித்ததால், அமமுக., நிர்வாகிகள் பலரும் புத்திசாலித்தனமாக அதிமுக.,வில் மீண்டும் சேர்ந்து தினகரன் கூறியபடி புத்திசாலித்தனமான முடிவை எடுத்து வருகின்றனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img