‘நீயா,, நானா.“., செவிலியா்கள்,  டீன்“ போராட்டத்தால் பாதிக்கப்படும் அப்பாவி நோயாளிகள் ……!

KARUR GH 2 - 2026நோயாளிக்கு கொடுக்கிற பாலைக்கூட விட்டுவைக்கலங்க!’ – கரூரில் டீனுக்கு எதிராக 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம்!

செவிலியர் மீது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை டீன் ஆக இருப்பவர் ரோஸி வெண்ணிலா. இவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால், கோபமான டீன், மருத்துவர்கள் மூலம், `நோயாளிகளுக்குப் பணிசெய்வதை விட்டுவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி என்கிற செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்’ என்று உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், `எங்களை வதைக்கும் டீனை மாற்றும்வரை பணிசெய்யமாட்டோம்’ என்றபடி, இருபதுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் டீன் ரோஸி வெண்ணிலா, அத்துமீறி தனது அறைக்குள் நுழைந்துவிட்டதாக மூன்று பத்திரிகையாளர்கள் மீது கரூர் நகரக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விவகாரம் விறுவிறுப்பாகிக்கொண்டிருக்கிறது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இதற்கிடையில், கரூர் ஆர்.டி.ஓ சரவணமூர்த்தி செவிலியர்களிடம் இருமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கூறியதாவது கடந்த “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக ரோஸி வெண்ணிலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கட்டடத்தின் மேல் குளிரூட்டப்பட்ட அறையில் தனது உறவினர்களுடன் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கிறார்.

அதோடு, ஒப்பந்தப் பணியாளர்களை மருத்துவமனையில் பணியாற்றவிடாமல், கட்டாயப்படுத்தி அவர்களைத் தனது சொந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார்.

அதேபோல், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பால், காய்கறிகள் உள்ளிட்டப் பொருள்களையும் தனது சொந்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

மருத்துவர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் செய்யக்கூடிய வேலைகளையும் சேர்த்து எங்களையே பார்க்கச் சொல்கிறார்.

இதனால், எங்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது. அதன் காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்பட்டுள்ளது.

25 தொழில்நுட்ப உதவியாளர்கள் இருந்தும், ரத்தம் சேகரிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்.

மருத்துவமனைப் பயன்பாட்டுக்கு வரும் பணத்தை தனது சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அதனால், இவரிடமிருந்து எங்களைக் காக்க வலியுறுத்தி, ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதைச் செய்தி சேகரிக்க வந்த மூன்று பத்திரிகையாளர்கள் மீது, `என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ என்று கேஸ் கொடுத்துட்டார்.

செல்வராணி என்ற செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டார். அவரை மாற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய டீன் ரோஸி வெண்ணிலா, “எல்லாம் பொய்க்குற்றச்சாட்டுகள். நோயாளிகளின் உணவுகளுக்காக ஒதுக்கப்படும் முழுநிதியையும் முறையாகச் செலவிட வேண்டும் என்பதால், ஏழு நாள்களும் நோயாளிகளுக்கு உணவு வழங்கச் சொல்லியிருக்கிறேன்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தினம் இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இது ஒப்பந்ததாரருக்குப் பிடிக்கவில்லை. அவர்தான் செவிலியர்களைத் தூண்டிவிட்டு, இப்படிப் போராட வைக்கிறார்.

சில செவிலியர்களைத்தவிர, மற்றவர்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள். ஆனால், சிலர் மட்டும் இப்படி பணிசெய்யாமல் போராட்டம் செய்கிறார்கள்.

என்மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இந்தச் செவிலியர்களின் போராட்டத்தால், 1800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், “இவர்களின் சண்டைகளால் நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சை கிடைக்கவில்லை.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அவசரப் பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளைக் கவனிக்க ஆளில்லாமல், அவர்கள் நிலை அபாயத்துக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் சண்டை முடியலன்னா, இவர்களை எதிர்த்து, நாங்க நோயாளிகளோடு போராடுவோம்” என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories