தண்ணீர்ப் பஞ்சம், மின் தடை… சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

koyambedubusstation - 2026

தண்ணீர் பஞ்சம், மின் தடை காரணமாக, சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை நகரவாசிகள்!

சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், சூளைமேடு, கே.கே.நகர், பல்லாவரம், அனகாபுத்தூர், உள்ளிட்ட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

அதே போல், சென்னையின் அனைத்து இடங்களிலும் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தற்போது தண்ணீர் பிரச்னையுடன் மின்வெட்டு பிரச்னையும் தலை தூக்கி இருப்பதால், பெருமளவில் செலவு செய்து தண்ணீர் பிடிக்க முடியாமலும், சரியாக தங்களது அன்றாட வாழ்வை ஓட்ட முடியாமலும் மக்கள் தங்களது நிம்மதியை இழந்துள்ளனர்.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் மூடப்பட்டன.

இந்த மேன்சன்களில் தங்கியிருந்தவர்கள் அனைவரும், சென்னையை விட்டு வெளியே இருந்து வந்தவர்கள். குறிப்பாக, தென்மாவட்டங்கள், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் தற்போது, சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் சிலர் சொந்த ஊர்களுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.