போலீஸை தாக்கிய ‘அந்த’ 4 பேர் மீது குண்டாஸ்: காவல் ஆணையர் உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

4 muslims attacked policeman.jpg.pagespeed.ic . ckWZNmIJC - 2026

நள்ளிரவில் போலீசாரை தாக்கி, கேவலப் படுத்தி, மிரட்டல் விடுத்த இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேரை பின்னர் கைது செய்தது காவல் துறை. தற்போது அவர்கள் 4 பேர் மீதும்  குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக காரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள், திருநங்கைகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவர்களை போலீசார் எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் காரில் திரும்பி வந்து அங்கிருந்த முதல் நிலைக் காவலர் கார்த்திகேயனை தாக்க முற்பட்டனர். இதைத் தொடந்து போலீசாரை தாக்கிய 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே சிறையில் உள்ள 4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: அடிச்சவன் முஸ்லிமா இருந்தா… அடிவாங்கின போலீசை இடம் மாத்து! சூப்பர் தமிழக போலீஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.