காலி கல்லாப்பெட்டியைக் கண்டு கடுப்பான திருடன்… செய்த காரியம் என்ன தெரியுமா?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

cuddalore shop2 horz - 2026உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா?” என்று கடிதம் எழுதி வைத்து குரங்கு வேலை செய்த திருடன் குறித்த தகவல் நெய்வேலியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் ஜெயராஜ். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கம் போல் இன்று காலையில் கடையைத் திறந்து பார்த்த போது கடையில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்கக் கூரையை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த அரிசி மூட்டை, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்தும், பொருட்களை வாரி இறைத்தும் சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் வேறு அந்தத் திருடன் எழுதி வைத்துள்ளான்!  அதில்… ” உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என்று எழுதப் பட்டிருந்தது.

cuddalore shop3 - 2026இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், பின்னர் இது குறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து கடிதம் எழுதி வைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.