அனுமதியின்றி பேரணி பாஜக அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு..

Published:

500x300 1839447 annamalai - 2026

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் கொலையை கண்டித்து செவ்வாய்கிழமை மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அனுமதியின்றி மெழுகு வர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் பேரணி நடந்தநிலையில் 3,500 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img