vikatan 2023 03 1a078cee 361f 4849 9b74 3bf118f4e5c3 1 - 2026

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்.21- வரை நடைபெறும்- சபாநாயகர்..

சென்னை
vikatan 2023 03 1a078cee 361f 4849 9b74 3bf118f4e5c3 1 - 2026

தமிழக பட்ஜெட் ஏப்.21-ந்தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும்.

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

பட்ஜெட் மீதான விவாதம் 23,24,27,28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.