தமிழர்களை எல்லாம் சாகடிச்சிட்டீங்க… இனிமே கொலையாளிகளை மன்னிச்சிட்டேங்கிறது வெத்து அரசியல்: ஜெயக்குமார் காட்டம்!

jayakumar - 2026

சென்னை:

ஈழத்தில் தமிழர்களை எல்லாம் சாகடித்துவிட்டு, இப்போது கொலையாளிகளை மன்னித்து விட்டேன் என்று சொல்வது வெற்று அரசியலுக்காகத்தான்… இப்படி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, “எங்கள் தந்தை கொலையால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம், காயப்பட்டோம். பல ஆண்டுகளாக கோபத்துடன் இருந்தோம். இருப்பினும எப்படியோ நாங்கள் கொலையாளிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம்” என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது. அவரது இந்தப் பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

ராகுல்காந்தியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதில் கொடுத்துள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தபோது தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம். எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்… என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ராகுல் கூறுவதை கமல்ஹாசன் ஆதரிக்கிறாரே என்று கேட்டபோது, ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த திமுக.,வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது இதை நியாயப்படுத்துகிறாரா? என்று பதில் கேள்வி கேஎட்டார்.

தொடர்ந்து, அப்படியென்றால், ராகுல் இதில் அரசியல் செய்வதாகக் கருதுகிறீர்களா? என்று கேட்டபோது, அங்கே எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதைப் பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. வேறு எதற்காக என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பல மட்டங்களில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில், பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், “2 லட்சம் தமிழர்களைக் கொன்ற போது மௌனமாக இருந்தது ஏன்?” என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories