நான் மட்டும் முதல்வரானால் … பிறகு நடிக்க மாட்டேன்! : ரசிகர்களுக்கு விஜய் தந்த ‘டிப்ஸ்’!

சினி நியூஸ் சென்னை தமிழகம்

sarkar audio launch - 2026

சென்னை: நான் மட்டும் நிஜத்தில் முதல்வரானால் பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வௌியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இசையை ரசிகர்களே வெளியிட்டனர். இதற்காக ஒரு இணையதளம் துவக்கப்பட்டு, அதை ரசிகர்களே வௌியிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியபோது, நன்றி நண்பா, ரசிகர்களின் ஆரவுக்கு நன்றி. இந்த விழாவின் நாயகன் ரஹ்மான். ஆளப் போறான் தமிழன் பாடல், தமிழர்களின் அடையாளம். ஒரு விரல் புரட்சி ஒட்டுமொத்த மக்களின் அடையாளம். ரஹ்மான் இசையமைத்திருப்பது சர்காருக்கு ஆஸ்கர் கிடைத்த மாதிரி. அவருடன் விவேக் இணையும் போது இன்னும் மேஜிக் ஆகிவிடுகிறது.

நாங்கள் இணையும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து விடுகின்றன. சர்காரில் என்ன ஸ்பெஷல் என்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியலில் மெர்சல் செய்திருக்கிறார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில், சாவித்ரி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். பாராட்டுகள். வரலட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபுவின் வளர்ச்சியை பார்த்து வியந்தேன்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம், ஆனால், வெற்றி அடையக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் உழைக்கிறது. வாழ்க்கை என்ற விளையாட்டை பார்த்து விளையாடுங்க. இந்த டயலாக் யார் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால் நான் பாலோ செய்கிறேன்.

உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னு இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்குமாம். உண்மைதான் இது என் வாழ்க்கையில் சரியாக பொருந்துகிறது. நீங்களும் அதை பின்தொடருங்கள்.

சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம். நான் படத்தை சொன்னேன். பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்.

சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. ஒருவேளை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். எப்போதுமே தர்மம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும்… என்றார் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.