மீனவர் மீதான துப்பாக்கிச் சூடில் இலங்கைப் படை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:

தமிழக மீன்வர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் இலங்கைப் படையினர் மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது சிங்களப் படையினர் ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த மீன்பிடி கருவிகளின் மதிப்பு பல லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 9 மீனவர்களையும் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் சிங்களப்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கைப் படையினரின்  இந்த வெறித்தனமான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பகுதியில் நடந்துள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் மீதான இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 மீனவர்கள் கடந்த வாரம் தான் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 விசைப்படகுகளை ஒப்படைக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, அந்த படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. 104 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிம்மதியை அனுபவிப்பதற்குள்ளாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக 6 மீனவர்களை அவர்களுக்கு சொந்தமான 2 படகுகளுடன் சிங்களப் படை கைது செய்தது. இப்போது மேலும் 9 மீனவர்களையும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தி படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும். இத்தகைய அட்டூழியம் தொடர அனுமதித்தால்  தமிழக மீனவர்கள்  மீன்பிடித் தொழிலை கைவிடும் நிலை ஏற்படும். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்; மீனவர்களைத் தாக்க கூடாது என்று இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், இதுபோன்ற அத்துமீறல்களில் இலங்கை ஈடுபடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

எனவே, தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறலை மத்திய அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்களிடம் அத்துமீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் 15 மீனவர்களையும், 70 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories