குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!
சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது.சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார்.இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கலுக்கு ஊருக்கு போவணுமா? ரயில் முன்பதிவுக்கு இப்பவே களத்துல இறங்குங்க..!
தீபாவளி இன்னும் வரல… அதுக்கே ஊருக்கு போவுறதுக்கு முன் பதிவு செய்ய நாங்க பட்ட பாடு இருக்கே… என்று விழி பிதுங்கி நிற்கிறீர்களா? இதோ வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கான உங்கள் முறை!
முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா; ஸ்டாலின் அறிவிப்பு.!
முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
“எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்!” – புகழேந்தி விவகாரத்தில் டிடிவி தினகரன் விரக்தி!
கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.
கட்டடத் தொழிலாளியாக சென்னையில் பதுங்கியிருந்த பயங்கரவாத இயக்கத் தலைவன் கைது!
ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் அசதுல்லா ஷேக் என்று போலீஸார் கூறினர்.
“திமுக.,வினர் தங்கள் குழந்தைகளுக்கே தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை..!” – கருணாநிதிக்கு இப்போ கேட்காதே ‘துரை’..!
ஓட்டல்களில் வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாகவும் கூறிய துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்றார்.
சென்னையில்… 2 மாதத்தில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்!
இதனிடையே, புதிய மோட்டார் வாகனச்சட்டம், அரசுக்கு காமதேனு அல்லது கற்பக விருட்சம் கிடைத்து விட்டதுபோல்தான் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழக ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியா்கள் அளிக்கபோகும் சிறப்பு பயிற்சி..?
அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம்.அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள் என்று கூறினார்.
ரூ.8 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பு: எடப்பாடிக்கு ராமதாஸ் வாழ்த்து!
இவை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்பது உறுதி. அந்த வகையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழக முதலமைச்சரின் 3 நாடுகள் பயணம் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.
நாடு திரும்பிய எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு! ரூ. 8 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளதாம்!
தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திற்கு தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஷாக் அடிக்கும் புதிய மின் கட்டண உயர்வு ?
பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.
46 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.