3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு; மற்ற இடங்களில் வழக்கம்போல்!

கோவை சற்றுமுன் சென்னை தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
Chief Secretariat - 2026

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த மூன்று மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது!

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. இந்த 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

27ஆம் தேதிக்கு மேல் முதல் முறை வெளியே வந்தால் 100 அபராதம் இரண்டாம் முறை வெளியே வந்தால் 500 அபராதம் அதையும் மீறி மூன்று முறை வெளியே வந்தால் சிறை தண்டனை; பட்டங்கள் பறக்க விட தடை; நடைபயணம் செல்ல தடை; நடமாடும் காய்கறி அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.