அம்மா உணவகத்தில்… பட வெறுப்பு அரசியல்! ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்பு!

Published:

amma unavagam
amma unavagam

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்துக்கு அருகில் கருணாநிதி படம்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்பு !

அம்மா உணவகத்தில் அம்மா படம் அருகில் அய்யாவின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துதை அளித்தால் ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பசிப்பிணி இருக்கக்கூடாது என்று மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில் கடந்த 19.02.2013 அன்று அம்மா உணவகத்தை சென்னையில் அவர் தொடங்கி வைத்தார் .

தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

தற்போது அம்மா உணவக திட்டம் ஆந்திர , கர்நாடகா , ஒரிசா , உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது. இதில் 12 பேர் கொண்ட பெண்கள் குழுவாக இணைந்து அம்மா உணவகத்தை நடத்தி வருகின்றனர் . அதிகாலை முதல் மாலை வரை பணியாற்றி வருகின்றனர் .

rbudayakumar
rbudayakumar

திருமங்கலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அம்மா உணவகத்திற்கு அரிசி , பருப்பு , காய்கறிகள் விநியோகம் செய்து வருபவர்களுக்கு கடந்த ஆறுமாதமாக பணம் கொடுக்கப்படாமல் அவர்களை அலைகழித்து வருவதால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவதிலும் உணவு தயாரித்து வழங்குவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுவருகின்றன .

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இதனால் தொடர்ந்து அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கி ஏழை எளிய சாமானிய மக்களின் பசி தீர்க்கும் சேவையை தொடர்ந்து செய்ய முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் அம்மா உணவகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் அம்மா திருவுருவ படத்திற்கு அருகிலேயே அய்யாவின் படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் அம்மாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பது , அகற்ற முயற்சிப்பது வீண் முயற்சியே. அம்மாவின் படத்திற்கு அருகில் அய்யாவின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துதை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img